Thursday, May 29, 2008

கவிதை 4

-------காலம்-------
கடந்த காலம் என்பது
நினைவுகள்
எதிர் காலம் என்பது
கனவுகள்
நிகழ் காலம் என்பது
கடவுள் தன்மை

----------காமம்--------------
பனியால் கருவுற்ற காற்று
சாரல் உருகொண்டு - மெல்ல
மலரும் ரோஜாவை தொட்டு செல்ல
பற்றிக்கொண்ட இதழ்கள் ஒற்றிக்கொள்ளும்

----------சலனம்-------------
வானம் பார்க்க வந்த மீனை
வசதியாய் கொத்திச்செல்ல
பரந்த நீரின் மேனியை
பறந்து சிராய்த்து செல்லும் குருவி

No comments: