Wednesday, May 21, 2008

கவிதை 3

-------இசை---------
ஏரி நடுக்கரையில்
சாய்ந்தெழும்பும் காய்ந்த
கிளை - அதற்கு
ஒத்தூதும் தேனிக்கள்


---------பார்வை---------
கடந்து செல்லும் பெண்களின்
கருங்கூந்தலை நோக்கும்
பூங்காவின் மல்லி அரும்பு

---------இன்பம் ------------
அமர்ந்திருந்த மட்டை அசைந்தாட
குடியிருந்த குழவிகள் குரலெழுப்ப
சிறகடித்து உவகை கொள்ளும்
குட்டிப்பருந்து

No comments: