-------காலம்-------
கடந்த காலம் என்பது
நினைவுகள்
எதிர் காலம் என்பது
கனவுகள்
நிகழ் காலம் என்பது
கடவுள் தன்மை
----------காமம்--------------
பனியால் கருவுற்ற காற்று
சாரல் உருகொண்டு - மெல்ல
மலரும் ரோஜாவை தொட்டு செல்ல
பற்றிக்கொண்ட இதழ்கள் ஒற்றிக்கொள்ளும்
----------சலனம்-------------
வானம் பார்க்க வந்த மீனை
வசதியாய் கொத்திச்செல்ல
பரந்த நீரின் மேனியை
பறந்து சிராய்த்து செல்லும் குருவி
Thursday, May 29, 2008
Wednesday, May 21, 2008
கவிதை 3
-------இசை---------
ஏரி நடுக்கரையில்
சாய்ந்தெழும்பும் காய்ந்த
கிளை - அதற்கு
ஒத்தூதும் தேனிக்கள்
---------பார்வை---------
கடந்து செல்லும் பெண்களின்
கருங்கூந்தலை நோக்கும்
பூங்காவின் மல்லி அரும்பு
---------இன்பம் ------------
அமர்ந்திருந்த மட்டை அசைந்தாட
குடியிருந்த குழவிகள் குரலெழுப்ப
சிறகடித்து உவகை கொள்ளும்
குட்டிப்பருந்து
ஏரி நடுக்கரையில்
சாய்ந்தெழும்பும் காய்ந்த
கிளை - அதற்கு
ஒத்தூதும் தேனிக்கள்
---------பார்வை---------
கடந்து செல்லும் பெண்களின்
கருங்கூந்தலை நோக்கும்
பூங்காவின் மல்லி அரும்பு
---------இன்பம் ------------
அமர்ந்திருந்த மட்டை அசைந்தாட
குடியிருந்த குழவிகள் குரலெழுப்ப
சிறகடித்து உவகை கொள்ளும்
குட்டிப்பருந்து
Wednesday, May 14, 2008
கவிதை 2
--------------நிறைவு-----------------
குழந்தை அழுகிறது
தாய் காத்திருக்கிறாள்
கணவன் வீடு திரும்புகிறான்
அடுப்பில் பொங்குகிறது பால்
----------விடுதலை---------
ஊசலாடும் மரச்சருகை
தென்றல் தீண்ட-காற்றில்
ஊஞ்சலாடி (த)கரை சேரும்
-------------அன்பு---------------
காரில் அகப்பட்ட
ஆட்டுக்குட்டியை முகர்ந்து பின்
மேலே பார்க்கும் பசு
குழந்தை அழுகிறது
தாய் காத்திருக்கிறாள்
கணவன் வீடு திரும்புகிறான்
அடுப்பில் பொங்குகிறது பால்
----------விடுதலை---------
ஊசலாடும் மரச்சருகை
தென்றல் தீண்ட-காற்றில்
ஊஞ்சலாடி (த)கரை சேரும்
-------------அன்பு---------------
காரில் அகப்பட்ட
ஆட்டுக்குட்டியை முகர்ந்து பின்
மேலே பார்க்கும் பசு
Sunday, May 11, 2008
கவிதை 1
-------------பிரிவு ------------------
வெயில் பட்டு துளிரிலிருந்து
உருகி ஒழுகும் பனித்துளி
---------------மொழி ------------------
கிழக்கே ஒரு குயில் சத்தம்
கூ.....................................
பின் மௌனம் தொடர
மேற்கிலிருந்து ஒரு சத்தம்
குக்கூ...................................
............... மகிழ்ச்சி.................
மேய்ச்சல் சென்று
திரும்பும் தாய்
தலை உலுக்குகிறது கன்று
வெயில் பட்டு துளிரிலிருந்து
உருகி ஒழுகும் பனித்துளி
---------------மொழி ------------------
கிழக்கே ஒரு குயில் சத்தம்
கூ.....................................
பின் மௌனம் தொடர
மேற்கிலிருந்து ஒரு சத்தம்
குக்கூ...................................
............... மகிழ்ச்சி.................
மேய்ச்சல் சென்று
திரும்பும் தாய்
தலை உலுக்குகிறது கன்று
Subscribe to:
Comments (Atom)